Monday 28 December 2015

**** ஒரு 'G' ****

ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அவளைக் கண்டேன்..
உங்கள் கற்பனை ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்திவிட்டு மேலும் தொடருங்கள்..

ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அவளைக் கண்டேன்..
என்னை நோக்கி வந்துகொண்டிருந்தாள்..
என்னையென்றால், என்னையல்ல..
பேருந்து நிறுத்தத்தை நோக்கி..

அவள் எந்த ஊரிலும் காணக்கிடைப்பவள்தான்..
நிறைமாத கர்ப்பிணி..
கால்களில் செருப்பில்லை..
கண்களில் ஒரு யுகத்தின் களைப்பு ..

பச்சை நிறத்தில் பூப்போட்ட சேலை..
சிகப்பு நிற ரவிக்கை..
கழுத்தில் மஞ்சள்ச் சரடு..
கறுப்பு நெற்றியில் சிறிது குங்குமம்..
வேறெதுவும் அணியாத,
பாதி விதவை..

அவள் விலா ஊன்றி, பெருமூச்செறிந்து நகர்ந்துகொண்டிருந்தாள்..
ஒரு ஆட்டோ புழுதியை கிளப்பியவாறு அவளை வழிமறித்தது..
ஆட்டோகாரன் வேண்டுகோள் பாவனையில் அவளிடம் ஏதோ சொல்ல,
அவள் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்..

அந்த ஆட்டோ என்னைக்கடந்து சென்றபோது,
அதன் பின்னால்,
இடமிருந்து வலமாக M 'G' R றும்,
மேலிருந்து கீழாக 'G' னி யும்,

ஒரு 'G' இன் நாற்ச்சந்தியில் சந்தித்துக்கொண்டனர்..!